"அறஞ்சொல்லும்நெஞ்சத்தான்அன்மைபுறஞ்சொல்லும்
புன்மையாற்காணப்படும்.'
என்கிறார்வள்ளுவர்.
இதன்மூலம்-பிறரைப்பற்றிஒருவர்புறம்பேசுவதைவைத்தே,அவர், அறத்திற்குமதிப்பளிக்காதவர்என்பதைத்தெரிந்துகொள்ளலாம்என்கிறார்அவர்.
இந்தக்குறள், யாருக்குப்பொருந்துகிறதோஇல்லையோ, பிரதமர்மோடிக்குமிகப்பொருத்தமானகுறளாகத்திகழ்கிறது.
காரணம், பழுத்தஅறநெறியாளர்போலமக்கள்முன்காட்டிக்கொள்கிறமோடி, நாடாளுமன்றத்தேர்தல்பிரச்சாரக்கூட்டங்களில்தனதுஆட்சியின்சாதனைகளைப்பட்டியலிட்டுஓட்டுகேட்பதற்குபதிலாக, எதிர்க்கட்சிகளையும்சிறுபான்மைமக்களையும்வன்மத்தோடுவிமர்சித்துவருகிறார். ஏனென்றால், அவரதுஆட்சியில்சொல்லிக்கொள்ளும்படிசாதனைகள்எதுவும்இங்கேநிகழவில்லை.
அவரதுஆட்சியில்இந்தியாவைத்திணறவைக்கும்வேலைஇல்லாத்திண்டாட்டம்போக்கப்படவில்லை. தொடர்ந்துபோராடிவரும்விவசாயிகளின்கோரிக்கைகள்கொஞ்சமும்நிறைவேற்றப்படவில்லை. மக்களைவாட்டும்விலைஉயர்வைக்கட்டுப்படுத்தஎதுவும்நடக்கவில்லை.
இந்தியாவின்பொருளாதாரநிலைமேம்படுத்தும்முயற்சிகள்கையில்எடுக்கப்படவில்லை. மக்களின்
வாழ்க்கைத்தரம்உயர்த்தப்படவேஇல்லை. மக்களைவாட்டும்வறுமைநிலைக்குகொஞ்சமும்விடைகொடுக்கமோடிஅரசுமுன்வரவில்லை. அதனால், தனக்குஎதிராகஅணிவகுக்கும்எதிர்க்கட்சிகளைத்தாக்கிவருவதோடு, அவைதாங்கிப்பிடிக்கும்சிறுபான்மைமக்கள்மீதும்தனதுவன்மத்தையும்காழ்ப்புணர்வையும்தயங்காமல்உமிழ்ந்துகொண்டேஇருக்கிறார்.
ராஜஸ்தான்மாநிலம்பன்ஸ்வாராவில்ஏப்ரல் 21-ஆம்தேதிநடந்தபிரச்சாரக்கூட்டத்தில்பேசியமோடி, "காங்கிரஸ்கட்சியின்தேர்தல்அறிக்கையைப்பாருங்கள். அதில்நம்பெண்கள்வைத்திருக்கும்தங்கத்தைபங்கீடுசெய்வோம்என்றுசொல்லியிருக்கிறார்கள். ஆகவேஉங்கள்தங்கநகைகளைஇங்கேஊடுருவியவர்களுக்குஅவர்கள்தரப்போகிறார்கள். அதிகம்குழந்தைகளைப்பெறுகிறவர்களுக்குத்தாரைவார்க்கப்போகிறார்கள். முன்புகாங்கிரஸ்ஆட்சிக்காலத்தின்போது, நாட்டின்சொத்துக்களில்இஸ்லாமியர்களுக்குமுன்னுரிமைஇருக்கிறதுஎன்றுகூறினார்கள். அப்படியென்றால்யாருக்குஉங்கள்சொத்துக்கள்போகப்போகிறது? என்றுயோசித்துப்பாருங்கள்' என்றுஇட்டுக்கட்டிப்பேசினார்.
இதன்மூலம், இஸ்லாமியர்களுக்கும்ஏனையசிறுபான்மைமக்களுக்குஎதிரானவெறுப்புணர்வைஉண்டாக்கமோடிமுயற்சிக்கிறார்.உடனேஇதுகுறித்து, காங்கிரஸ்கட்சித்தலைவர்களானஅபிஷேக்சிங்வி, சல்மான்குர்ஷித்உள்ளிட்டவர்கள், தேர்தல்ஆணையத்திடம்சென்று, மோடிமீதுபுகார்மனுவைஅளித்தார்கள். அதேபோல், மோடியின்இந்தவெறுப்புப்பேச்சுதொடர்பாக, டெல்லிகாவல்நிலையத்தில்மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சிசார்பில்அக்கட்சியின்மூத்ததலைவரானபிருந்தாகாரத்தும்புகார்கொடுத்தார்.
இந்தப்புகார்களைத்தேர்தல்ஆணையமும், காவல்துறையும்கண்டுகொள்ளவேஇல்லை. அதனால், மேலும்தைரியம்பெற்றமோடிஅடுத்தடுத்தபிரச்சாரக்கூட்டங்களிலும்தனதுவெறுப்புப்பேச்சைத்தொடர்ந்துவாந்திஎடுத்தார். குறிப்பாக...
- ராமர்கோவிலைஇந்தியாகூட்டணிஇடித்துவிடும்என்றுஅப்பாவிஇந்துக்களைபயமுறுத்தினார்.
- முஸ்லிம்களின்வாக்குக்காகஇந்தியாகூட்டணியினர்முர்ஜாநடனம்கூடஆடுவார்கள்என்றுஏகடியம்செய்தார்.
- பழங்குடியினமக்கள்வாக்களிக்கும்போது, ஜிகாத்நபர்களிடம்எச்சரிக்கையாகஇருக்கவேண்டும்என்றுவிஷவிதைதூவினார்.
- அதானியின்டெம்போ, காங்கிரஸ்தலைமையகத்துக்குவந்ததா? எனதன்னிலைமறந்து, ஏடாகூடமாகக்கேள்விஎழுப்பினார்.
- இதைத்தாண்டி, அனைத்துமக்களையும்இழிவுபடுத்தும்வகையில், ரேஷனில்போடும்உணவுக்காகமக்கள்நன்றிக்கடனுடன்இருக்கவேண்டும்எனபீகாரில்குரல்எழுப்பினார்.
- அதுமட்டுமா? மகாத்மாகாந்தியைப்பற்றிதிரைப்படம்வரும்வரைஅவரைஉலகில்யாருக்குமேதெரியாதுஎன்று, அவரையும்விட்டுவைக்காமல்அவமானப்படுத்திஇருக்கிறார்.
- இப்படியெல்லாம்வாய்க்கொழுப்பாகப்பேசிவிட்டு, இன்னொருமேடையில், சிறுபான்மையினரையும்முஸ்லிம்களையும்நான்தவறாகஒருபோதும்பேசியதுஇல்லைஎன்றுஅந்தர்பல்டிஅடித்தார்.
- இதுஎல்லாவற்றையும்விட, ஒடிசாமாநிலபூரிபகுதியில்நடைபெற்றபிரச்சாரகூட்டத்தில்மைக்பிடித்தமோடி, ""இங்குள்ளபூரிஜெகநாதர்கோயிலின்பொக்கிஷஅறையின்சாவிகாணாமல்போய்விட்டது. நமதுவீட்டுசாவிகாணாமல்போனால்ஜெகந்நாதரிடம்முறையிடலாம். ஆனால்ஜெகநாதர்கோயில்பொக்கிஷஅறைசாவியேகாணாமல்போய்விட்டது. அந்தசாவிதமிழ்நாட்டுக்குஅனுப்பிவைக்கப்பட்டுள்ளதாககூறுகிறார்கள்'' என்றுஅபாண்டமாகதமிழர்களின்மீதுமோடிதிருட்டுப்பழியைச்சுமத்தினார்.
தமிழ்நாட்டுக்குவரும்போதெல்லாம்தமிழ், தொன்மையானமொழிஎன்றும், தமிழ்ப்புலவர்வள்ளுவர்பெரும்சிந்தனையாளர்என்றும், தமிழ்மக்கள்சிறந்தபண்பாடுகொண்டவர்கள்என்றும் "காக்காய்பிடிக்கும்' மோடி, ஒடிசாபோனபோது, தமிழர்களைத்திருடர்களாகசித்தரித்திருக்கிறார்.
இவரதுஅல்பபுத்தியைக்கண்டுகொதித்துப்போன, தமிழகமுதல்வர்ஸ்டாலின், தமிழர்களைத்திருடர்கள்எனகூறும்அளவுக்குபிரதமருக்குஏன்இவ்வளவுவன்மம்? எனகண்டனக்கேள்வியைஎழுப்பியிருக்கிறார். மோடியாருக்கும்உண்மையானவர்இல்லைஎன்பதற்குஇதைவிடஉதாரணம்தேவையில்லை. அதுமட்டுமல்ல; தன்னைவிடஒருடுபாக்கூர்பேர்வழிஇல்லைஎன்றுகாட்டும்வகையில், தனியார்தொலைக்காட்சிஒன்றுக்குபேட்டிஅளித்தமோடி, அப்பாவிமக்களின்காதில், கலர்கலராகப்பூசுற்றமுனைந்தார்.
அந்தப்பேட்டியில்திருவாய்மலர்ந்தஅவர்...
"என்தாயார்உயிரோடுஇருக்கும்வரை, இந்தஉலகிற்குஅவர்மூலம்தான்வந்தேன்என்றுநம்பிக்
கொண்டிருந்தேன். ஆனால், என்தாயாரின்மரணத்திற்குபிறகு, நான்பலவற்றைசிந்தித்துப்பார்த்தேன். அப்போதுதான்என்னைஇந்தஉலகிற்குஅனுப்பியதுபரமாத்மாதான்என்பதைஉணர்ந்தேன்.' என்றுசொன்னதோடு....
"நான், பயாலஜிக்கலாகபிறந்திருக்கவாய்ப்பில்லை. நான்மனிதப்பிறவிஅல்ல. ஏதோவொருவிஷயத்தைநடத்தியேஆகவேண்டும்என்பதற்காக, கடவுள்என்னைஇந்தபூமிக்குஅனுப்பியிருக்கிறார்' என்றுரீல்மேல்ரீலாகச்சுற்றினார்.கடவுள்தான்இவரைபூமிக்குஅனுப்பினாராம்.இப்படிச்சொல்வதன்மூலம்அவர்கடவுளின்மதிப்பையும்கெடுத்து, ஆன்மீகத்தையும்அசிங்கப்படுத்துகிறார்.
பொய், பித்தலாட்டம், போலிச்சாமியார்களோடுஆட்டம்போடுவது, விவசாயிகளைச்சந்திக்கமறுப்பது, மக்கள்பிரதிநிதிகளைமதிக்காமல், அதானிஅம்பானிகளுக்குவால்பிடிப்பது, ஏழைஎளியமக்கள்வாழும்இந்தியகிராமங்களின்பக்கம்தலைவைத்துப்படுக்காமல், உலகநாடுகள்பலவற்றுக்கும்தொடர்ந்துசொகுசாகபயணம்நடத்தி, அரண்மனைகளிலும், மாடமாளிகைகளிலும்விருந்துஉண்பதுஎனபகட்டின்புத்திரராய்வாழ்ந்துகொண்டிருக்கிறார்மோடி.
இப்படிப்பட்டவரையாகடவுள்பூமிக்குஅனுப்புவார்? இப்படிப்பட்டஒருவர்இத்தனைவருடம்பிரதமராகஇருக்கிறார்என்பதேநமக்குஅவமானம். மீண்டும்அவரேபிரதமராகத்துடிக்கிறார்என்பது, அவரைத்தாங்கிப்பிடிக்கிறவர்களுக்கேபேரவமானம்.இதைஎல்லாம்எப்படிகுமட்டாமல்பார்த்துக்கொண்டிருப்பது?
இப்படிப்பட்டவரையாகடவுள்பூமிக்குஅனுப்புவார்? அப்படிப்பட்டமோடி. தமிழகம்வந்துதியானம்செய்யப்போகிறாராம்.இதுஅப்பட்டமானதேர்தல்விதிமுறைமீறல்என்றகுரல்கள்எழுந்துள்ளன. அவரதுதியானஅறிவிப்புகுறித்துவிமர்சித்திருக்கும்காங்கிரஸ்கட்சியின்சீனியர்தலைவரானகபில்சிபல்..."கடந்த 10 ஆண்டுகளில்மோடிஅரசுஎந்தசாதனையையும்செய்யாததால், அதுகுறித்துஅவரால்பேசமுடியவில்லை. அதனால்அவர்தியானம்செய்யப்போவதாகச்சொல்கிறார்.ஞானத்திற்குஅர்த்தமேதெரியாதஒருவர், என்னதியானம்செய்துவிடமுடியும்? எனவேமோடிவிவேகானந்தர்மண்டபம்செல்வதென்றால்கன்னியாகுமரிக்குபரிகாரம்செய்வதற்காகசெல்லட்டும்' என்றுநாகரிகமாகக்கிண்டலடித்திருக்கிறார்.
இதைவிடமோடிக்குயாரால்பதில்கொடுக்கமுடியும்!
-ஆதங்கத்தோடு,
நக்கீரன் கோபால்